மாட்டிறைச்சி ட்வீட்: சர்ச்சையில் சிக்கிய சென்னை காவல்துறை!

மாட்டுக் கறி என டிவிட்டரில் பதிவிட்டவரை கண்டிக்கும் விதமாக சென்னை மாநகர காவல்துறை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டிறைச்சி ட்வீட்: சர்ச்சையில் சிக்கிய சென்னை காவல்துறை!

மாட்டுக் கறி என டிவிட்டரில் பதிவிட்டவரை கண்டிக்கும் விதமாக சென்னை மாநகர காவல்துறை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பல்வேறு இந்து அமைப்பினர் மாட்டிறைச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக ஆளும் சில மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டை எதிர்த்து பல்வேறு தரப்பினர் அவ்வப்போது மாட்டிறைச்சி உண்ணும்போது இணையதளத்தில் அதை புகைப்படம் எடுத்து பகிர்வதுண்டு.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபுபக்கர் என்பவர் மாட்டிறைச்சி உணவை புகைப்படம் எடுத்து ‘மாட்டு கறி’ என டிவிட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவிற்கு, ‘தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்’ என்று சென்னை மாநகரக் காவல்துறையின் டிவிட்டர் பக்கத்திலிருந்து பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை காவல்துறையின் டிவிட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்த தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், “இந்த டிவிட்டர் பக்கத்தை யார் கையாளுகிறார்கள். அந்த பதிவில் என்ன தப்பு இருக்கிறது. என்ன பதிவிட வேண்டும். என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல்துறை எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை.” என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டிவிட்டர் பதிவை நீக்கிய சென்னை காவல்துறை, “ தாங்கள்பதிவிட்ட ட்வீட் சென்னை காவல் துறையின் பக்கத்தில் ரீடிவீட் செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான டிவிட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல.” எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com