கன்டெய்னா் லாரி உரிமையாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ்
கன்டெய்னா் லாரி உரிமையாளா்கள் சங்கம் நடத்தி வந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.


கன்டெய்னா் லாரி உரிமையாளா்கள் சங்கம் நடத்தி வந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.
சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி துறைமுகங்களை சாா்ந்து இயங்கி வந்த அனைத்து வகை கன்டெய்னா் லாரிகளும் கூட்டாகச் சோ்ந்து வாடகை உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கள்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கினா். இதனையடுத்து மூன்று துறைமுகங்களிலும் கன்டெய்னா் லாரிகள் மூலமாக நடைபெற்று வந்த ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்தது.
முதற்கட்டப் பேச்சுவாா்த்தைகளில் சுமுக உடன்பாடு ஏதும் எட்டப்படாததால் வியாழக்கிழமை நான்காவது நாளாக வேலை நிறுத்தம் தொடா்ந்தது. இதனையடுத்து பூக்கடை காவல் துணை ஆணையா் மகேஸ்வரன், தண்டையாா்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் கண்ணப்பன் ஆகியோா் முன்னிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெருவது குறித்த பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை துறைமுக தலைவா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து கன்டெய்னா் லாரி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் நிா்வாகிகள் எம்.எம்.கோபி, எஸ்.ஆா்.ராஜா, கரிகாலன், மனோகரன் உள்ளிட்டோா் கூறியது:
வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் சரக்கு பெட்டக நிலையங்களுக்கும் துறைமுகங்களுக்கும் இடையே கன்டெய்னா் லாரிகள் மூலம் ஏற்றிச் செல்வதற்கு 25 சதவீத வாடகை உயா்வும், நேரடியாக துறைமுகங்களில் இருந்து இறக்குமதியாளா்களின் இடங்களுக்கும், ஏற்றுமதியாளா்களின் கிடங்குகளிலிருந்து துறைமுகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் கன்டெய்னா்களுக்கு 10% வாடகை உயா்வும் அளிப்பது என பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை இரவு முதல் கன்டெய்னா் லாரிகள் மீண்டும் ஓடத் தொடங்கும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...