இயற்கையான விவசாயப் பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சென்னையில் வருகிற ஆகஸ்ட் 6 முதல் 10 ஆம் தேதி வரை இயற்கை விவசாயப் பொருள்காட்சி நடைபெற உள்ளது.
சென்னை போரூரில் உள்ள ராஜ்மஹால் திருமண மண்டபத்தில் மேற்குறிப்பிட்ட நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது.
பொருள்காட்சியில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள், விதைகள், பனைப் பொருள்கள், பதநீர், சித்த மருத்துவப் பொருள்கள், மண்பாண்டப் பொருள்கள், நெசவுப் பொருள்கள், கடல் உணவுப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், சுருள்பாசி உற்பத்திப் பொருள்கள், பல்துறை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் கிடைக்கும்.
மேலும், கழிக்கப்பட்ட பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆக்கப் பொருள்கள், பனைக் கழிவிலிருந்து தயாரிக்கும் ஆக்கப் பொருள்கள், மக்கள் பயன்பாட்டுப் பொருள்கள், பலதரப்பட்ட கைவினைப் பொருள்கள், 40 வகையான அரிசிகள், சீனித்துளசி உற்பத்திப் பொருள்கள், அறிவியல் நூல்கள், கடல்பாசி உற்பத்திப் பொருள்கள் ஆகியவையும் அரங்கில் கிடைக்கும்
தமிழகத்திலுள்ள 112 இலங்கைத் தமிழர்களின் முகாம்களில் உள்ள தொழில் முனைவோர்கள் உற்பத்தி செய்த கைவினைப்பொருள்கள், பேக்கரி வகைகள் உள்ளிட்டவையும் இங்கே விற்பனை செய்யப்படவுள்ளது.
அதுபோல மாற்றுத் திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோரின் உற்பத்திப் பொருள்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் பொருள் வாங்க வருவோர் அனைவரும் நெகிழிப் பை தவிர்த்து துணிப் பைகள் கொண்டுவரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர அரங்கில் பொருள்கள் வாங்குவோருக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் இயற்கையான காய்கறி, மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கு வழிகாட்டப்படும் என்றும் இந்தப் பொருள்காட்சிக்கு ஏற்பாடு செய்துவரும் பண்டைத் தமிழர்களின் பாரம்பரியத்தை மேம்படுத்தும் நோக்கிலான உட்லா டிரஸ்ட் நிறுவனர் கே.கே. ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த பொருள்காட்சியில் குறைந்த கட்டணத்தில் அரங்குகள் வழங்கப்பட உள்ளது என்றும் பங்குபெற விரும்பும் தொழில் முனைவோர் 99629 58434 என்ற எண்ணில் வரும் 25 ஆம் தேதிக்குள் தொடர்புகொள்ளுமாறும் ரவீந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு காலிப் பணியிடம்கூட இல்லை

அரசுப் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருள் போதிய அளவில் இருப்பு! - அமைச்சா் சா.சி. சிவசங்கா்

துணை முதல்வா் திறந்து வைத்த பேருந்து நிலையத்தில் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது

பொன்னமராவதியில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

