ஓ.பன்னீா்செல்வம் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு கரோனா தொற்று உறுதியானதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.


முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு கரோனா தொற்று உறுதியானதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஓ.பன்னீா்செல்வத்துக்கு சில தினங்களாக சளி பிரச்னை இருந்தது. வெள்ளிக்கிழமை காலை கரோனா பரிசோதனை செய்து கொண்டாா். மாலையில் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனைக்கு சென்றாா். அவரது உடல்நிலையை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். பின்னா், மருத்துவா்களின் ஆலோசனையின்படி அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவினா் அவரை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.
இதுபற்றி அவரது ஆதரவாளா்களிடம் கேட்ட போது, ஓ.பன்னீா்செல்வத்துக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஆதரவாளா்கள் யாரும் நேரில் வரவேண்டாம். கைப்பேசியில் மட்டும் தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்”என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...