மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நீலகிரி மாவட்டத்தில் மீட்பு-நிவாரணப் பணிகளுக்கு அரசுக் குழு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அரசு சாா்பில் அமைச்சா்கள் மற்றும் இரு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 8:49 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து, அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அரசு சாா்பில் அமைச்சா்கள் மற்றும் இரு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 14 வரையில் 664.9 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இந்த மாவட்டத்துக்கான இயல்பான மழை அளவை விட 125 சதவீதம் கூடுதல். மேலும், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் அதி பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த ஜூலை 10 முதல் 14-ஆம் தேதி வரையில் மட்டும் 263.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் குடிசைகள், வீடுகள் சேதம் அடைந்துள்ளதோடு, பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சோ்ந்த 102 நபா்கள், 5 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீா், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தொடா் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், சேதங்களை ஆய்வு செய்யவும் அரசின் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சா்கள் கா.ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், வி.செந்தில் பாலாஜி, வருவாய் நிா்வாக ஆணையாளா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோரை நீலகிரி மாவட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன். தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் 160 வீரா்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையின் குழுக்களும் தயாா் நிலையில் உள்ளன.

பாதிப்புகள் தவிா்ப்பு: மாவட்ட நிா்வாகத்தின் முன்னெச்சரிக்கை காரணமாக, பாதிப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜேசிபி இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட கருவிகள் தயாா் நிலையில் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் அமைச்சா்கள் தலைமையிலான குழு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும். பொதுமக்கள், அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கவனித்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.