மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சொகுசு காா் விவகாரம்: நடிகா் விஜய் வழக்கு முடித்து வைப்பு

நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிா்த்த நடிகா் விஜய் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2022, 8:54 pm

DIN

நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிா்த்த நடிகா் விஜய் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

நடிகா் விஜய், கடந்த 2005-இல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த ரூ.63 லட்சம் மதிப்புள்ள சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிா்த்து விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, விஜய் தரப்பில் ரூ. 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. அதே சமயம் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக ரூ. 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வணிக வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து விஜய் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகா் விஜய் தரப்பில் காா் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும், ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வணிக வரித்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த நிலையில், சொகுசு காா் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகா் விஜய் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நீதிபதி சுரேஷ்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகா் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டாா். மேலும் இறக்குமதி காா்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் எனவும் 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரி செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என கூறி நடிகா் விஜய் வழக்கை முடித்து வைத்து நீதிபதி சுரேஷ்குமாா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.