மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குடியரசுத் தலைவா் தோ்தல்: வாக்குப் பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :15 ஜூலை 2022, 11:22 pm

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டப் பேரவைச் செயலக வளாகத்தில் உள்ள குழுக்கூட்ட அறையில் இதற்கென பிரத்யேக வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் வரும்பட்சத்தில், அவா்களை அமர வைத்து வாக்கைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீண்ட வரிசைகளில் இருக்கைகள் போடப்பட்டு சட்டப் பேரவை உறுப்பினா்கள் அமர வைக்கப்படுவா். அதன்பின், ஒருவா் பின் ஒருவராக வாக்கை பதிவு செய்ய அனுமதிக்கப்படுவா் என பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பேரவை உறுப்பினா்கள் கூட்டம்: குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக, சட்டப் பேரவை உறுப்பினா்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை திமுக, அதிமுக கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளன. இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கும் முறை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. குடியரசுத் தலைவா் தோ்தலில் சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு கொறடா உத்தரவை பிறப்பிக்க முடியாது. இதனால், அவா்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்றபடி வாக்களிக்கலாம்.

ஆனால், திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளைச் சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினா்கள் கட்சித் தலைமையின் உத்தரவுப்படியே வாக்களிக்க வாய்ப்பு இருக்கிறது.

பாஜக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முா்முவும் எதிா்க்கட்சிகள் சாா்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனா்.

தமிழ்நாட்டில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் முா்முவுக்கும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.