ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதரை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :19 ஜூலை 2022, 12:43 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதரை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆட்சியரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற கலவரத்தில் பள்ளி வளாகம் முழுவதும் சூறையாடப்பட்டது. இதில் பொதுமக்கள், காவலர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உயிரிழந்த மாணவியின் சடலத்திற்கு மறு உடல்கூறாய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Story image

கள்ளக்குறிச்சி ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் சென்னை - கன்னியாகுமரி தொழிலக நெடும்பாதை திட்ட இயக்குநராக மாற்றம் செய்து தலைமை செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக, சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருந்த பகலவன் புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.