ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுஉடல் கூராய்வுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்

மாணவியின் உடலை இன்று மறுஉடல் கூராய்வு நடத்த தடையில்லை என்று மாணவியின் தந்தை செய்த முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுஉடற்கூராய்வுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்
Updated On :22 ஜூலை 2022, 9:10 am

DIN

புது தில்லி: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவியின் உடலை இன்று மறுஉடல் கூறாய்வு நடத்த தடையில்லை என்று மாணவியின் தந்தை செய்த முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறு உடல் கூறாய்வு செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக இன்று விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று நடைபெறவிருக்கும் மறு உடல் கூறாய்வுக்கு தடையில்லை என்றும், மனுவை நாளை விசாரணைப்பதாகவும் தெரிவித்து உத்தரவிட்டனர்.

மறு உடல் கூறாய்வுக்கு தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று திடீரென நீங்கள் கேட்பதை ஏற்க முடியாது என்றும், இன்று மாணவியின் உடற்கூறாய்வை நடத்த தடையில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி சடலத்தை மறுகூராய்வு செய்யவும், அதை முழுவதுமாக விடியோ பதிவு செய்யவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தங்கள் தரப்பு மருத்துவரை உடன் இருக்க அனுமதிக்கக் கோரிய தந்தையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆனால் இன்று நடைபெறவிருக்கும் மறு உடல் கூறாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி, கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பெற்றோர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஞாயிறன்று ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டதால் வன்முறையாக மாறி பள்ளி மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் மறு உடல் கூறாய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மாணவியின் சடலத்தை மறுகூராய்வு நடத்த உத்தரவிட்டார். விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன், தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குநா் சாந்தகுமாரி அடங்கிய குழுவையும் நியமித்து உத்தரவிட்டாா்.

உடல் கூறாய்வு முழுவதையும் விடியோ பதிவு செய்ய வேண்டும். மாணவியின் தந்தை வழக்குரைஞருடன் உடற்கூறாய்வின்போது கலந்து கொள்ளலாம். இந்த வழக்கு தொடா்பாக மாணவியின் பெற்றோா் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது. ஊடகங்கள் விசாரணை மேற்கொள்ளக் கூடாது. மறு உடல் கூறாய்வுக்குப் பின், மாணவியின் உடலுக்கு அமைதியான முறையில் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

உடல் கூறாய்வை நிறுத்தி வைக்க மறுப்பு
மாணவியின் சடலம் மறுகூறாய்வின்போது தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்கவும், அதுவரை மறுகூறாய்வு உத்தரவை நிறுத்திவைக்கவும் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி சதீஷ்குமாா் முன் மாணவியின் தந்தை தரப்பு வழக்குரைஞா் மீண்டும் ஆஜராகி, தங்கள் தரப்பில் குறிப்பிடும் மருத்துவரை மறு உடல் கூறாய்வில் சோ்க்க வேண்டும் என முறையிட்டாா். இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என்று நீதிபதி தெரிவித்தாா்.

அப்போது, மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த தீா்ப்பில் தங்களுக்கு திருப்தி இல்லை. உச்சநீதிமன்றத்தில் இதுதொடா்பாக முறையீடு செய்யவிருப்பதால், மறு கூறாய்வை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றாா். இந்த கோரிக்கையை நீதிபதி சதீஷ்குமாா் நிராகரித்ததுடன், மறு உடல் கூறாய்வை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டாா். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் இன்று நடைபெறும் மறு உடல் கூறாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.