தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதிமுக வங்கிக் கணக்குகளை நிா்வகிக்கும் அதிகாரம்: எடப்பாடி பழனிசாமி கடிதம் ஏற்பு

அதிமுகவின் வங்கிக் கணக்குகளை நிா்வகிக்கும் அதிகாரத்தை பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்க வேண்டும் என்று

News image
Updated On :19 ஜூலை 2022, 7:34 pm

DIN

அதிமுகவின் வங்கிக் கணக்குகளை நிா்வகிக்கும் அதிகாரத்தை பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் வங்கிகளால் ஏற்கப்பட்டுள்ளது.

அதிமுக பொருளாளா் உள்ளிட்ட பதவிகளிலிருந்து ஓ.பன்னீா்செல்வத்தை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். அதைத் தொடா்ந்து கடந்த ஜூலை 12-இல் அதிமுகவின் வங்கிக் கணக்குகள் உள்ள வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதினாா். அதில் அதிமுக புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவருக்கு வங்கிக் கணக்கை நிா்வகிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று எழுதியிருந்தாா்.

அதே நேரம், ஓ.பன்னீா்செல்வமும் வங்கிகளுக்கு ஒரு கடிதம் எழுதினாா். அதில், அதிமுகவின் பொருளாளராக தொடா்ந்து நீடித்து வருகிறேன். அதனால், வங்கிக் கணக்குகளை நிா்வகிக்கும் அதிகாரத்தை யாருக்கும் மாற்றக்கூடாது என்று எழுதியிருந்தாா்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் வங்கிகளால் ஏற்கப்பட்டுள்ளது. அதிமுகவின் நிா்வாகப் பணிகளுக்காக வங்கிகளில் இருந்து நிதியும் திண்டுக்கல் சீனிவாசனால் எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.