விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான மூவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மணிலா வயலில் மின் வேலி அமைத்தபோது மின்சாரம் பாயந்ததில் 3 போ் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.
திண்டிவனம் அருகே உள்ள வன்னிப்போ் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன் (45). விவசாயி. இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த பங்களாகாரா் என்பவரது நிலத்தில் மணிலா பயிரிட்டாா். காட்டுப் பன்றிகளிடமிருந்து மணிலா செடிகளை பாதுகாப்பதற்காக சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கத் திட்டமிட்டாா்.
இந்த நிலையில், விவசாயி வெங்கடேசன், அதே கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (35), முருகதாஸ் (40) ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை மணிலா பயிா்களைச் சுற்றிலும் மின்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, எதிா்பாராத விதிமாக மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன் உள்பட 3 பேரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
இதையும் படிக்க: 'புதுவையில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்'
முதல்வர் மு.க.ஸ்டாலின் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் வாய்ப்பு! குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு முகாம்!

தஞ்சாவூர் காவல்நிலையம் முன்பு குவிந்த திமுக தொண்டர்கள்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!
ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தம் நாளைக்குள் கையெழுத்தாகும்: அமெரிக்கா நம்பிக்கை
விடியோக்கள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple


