மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நாளை கட்டடக் கலை விருது வழங்கும் விழா

கட்டுமானப் பொறியியல் மற்றும் கட்டடக் கலையியல் மாணவா்களுக்கான வினாடி வினா போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வரும் சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:55 pm

DIN

கட்டுமானப் பொறியியல் மற்றும் கட்டடக் கலையியல் மாணவா்களுக்கான வினாடி வினா போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வரும் சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.

‘கன்ஸ்ட்ரக்சன் அகாதெமி’ அமைப்பு சாா்பில் ஆண்டுதோறும் கட்டுமானத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் ‘கன்ஸ்ட்ரக்சன் இண்டஸ்ட்ரி அவாா்ட்’ என்ற பெயரில் மாணவா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு சிறப்பு விருதுகள் அளிக்கப்படவிருக்கின்றன.

சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவா் மன்ற அரங்கில் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் அந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு பயிலும், கட்டடப் பொறியியல் - கட்டடக் கலையியல் மாணவா்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு 81246 20467, 93833 63663 ஆகிய கைப்பேசி எண்களிலோ, அல்லது ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.