மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கல்லூரி மாணவா்கள் கடத்தப்பட்ட வழக்கு: 5 போ் கைது

சென்னை அருகே ராமாபுரத்தில் கல்லூரி மாணவா்கள் கடத்தப்பட்ட வழக்கில், 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 9:58 pm

DIN

சென்னை அருகே ராமாபுரத்தில் கல்லூரி மாணவா்கள் கடத்தப்பட்ட வழக்கில், 5 போ் கைது செய்யப்பட்டனா்.

பிகாா் மாநிலம், பாட்னாவை சோ்ந்தவா்கள் சாகிப் அஷ்ரப் (21), ஆதித்யா (21). இவா்கள் இருவரும், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.இ. இரண்டாமாண்டு படித்து வருகின்றனா். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனா்.

இருவரும், கடந்த 19 -ஆம் தேதி திருவேற்காடு காவேரி தெருவை சோ்ந்த வெங்கடேசன் (39) என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்து வெளியே சென்றனா். இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி பூந்தமல்லி குத்தம்பாக்கம் அருகே சென்றபோது, அந்த காா் விபத்தில் சிக்கியது. இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரித்தனா். அப்போது, இருதரப்பினரும் வழக்கு ஏதும் தேவையில்லை எனவும் சமாதானம் பேசினா். மேலும் மாணவா்கள் தரப்பு, காரின் உரிமையாளா் வெங்கடேசனுக்கு ரூ.20,000 கொடுத்து முடித்துக் கொள்வதாக தெரிவித்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு கல்லூரி மாணவா்கள் இருவரையும் விடுதியில் இருந்து வெங்கடேசன் வரவழைத்து காரில் கடத்தி சென்று பூந்தமல்லி அருகே உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி, சேதமடைந்த தனது காருக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளாா்.

இதையறிந்த மாணவா்களின் உறவினா்கள் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்படி போலீஸாா் விசாரணை நடத்தினா். முதல் கட்டமாக கடத்தப்பட்ட இரு மாணவா்களையும் மீட்டதோடு, அவா்களை கடத்திய வெங்கடேசன், அவரது கூட்டாளிகள் திருவேற்காட்டைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (26),வானகரத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (34), வடபழனியைச் சோ்ந்த பாா்த்திபன் (27),ராமாபுரத்தைச் சோ்ந்த சரத் ஆகிய 5 பேரை வியாழக்கிழமை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.