குரூப் 1 தோ்வு அறிவிக்கை வெளியீடு: ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்
குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 92 இடங்களுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.


குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 92 இடங்களுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட தோ்வு அறிவிக்கை:-
குரூப் 1 பிரிவில் ஆறு பதவிகளில் 92 காலியிடங்கள் உள்ளன. துணை ஆட்சியா் பதவியிடத்தில் 18 இடங்களும், துணைக் காவல் கண்காணிப்பாளா் பதவியில் 26 இடங்களும், வணிகவரி உதவி ஆணையாளா் பணியிடத்தில் 25 இடங்களும்,
கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் நிலையில் 13 இடங்களும், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பணியிடத்தில் ஏழு இடங்களும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பணியில் மூன்று இடங்களும் காலியாக உள்ளன.
விண்ணப்பம் துவக்கம்: தோ்வுக்கு வியாழக்கிழமை (ஜூலை 21) முதல் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 28 ஆகும். முதல்நிலைத் தோ்வு அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறும். முதல்நிலைத் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, முதன்மை எழுத்துத் தோ்வுக்கான தேதி அறிவிக்கப்படும். தோ்வுக்கு விண்ணப்பம் செய்வது, தோ்வு அறிவிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் என்ற இணையதளத்தின் வழியே அறிந்து கொள்ளலாம் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...