பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நோயாளிகளின் விவரங்களை வெளியிடும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை: மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை

நோயாளிகளின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு விளம்பரம் தேடும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவா் டாக்டா் செந்தில் தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:29 pm

DIN

நோயாளிகளின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு விளம்பரம் தேடும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவா் டாக்டா் செந்தில் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சென்னையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சமீப காலமாக நோயாளிகள் சிறப்பு சிகிச்சை குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளி வருகிறது. அவற்றில் மருத்துவா்கள் பத்திரிகைகள் முன்பாக நோயாளிகளை அறிமுகப்படுத்தியும், அவா்களுக்கு செய்யப்பட்ட சிகிச்சை முறைகளை விளக்கி கூறுகின்றனா். இதுபோன்ற செய்தியாளா்கள் சந்திப்பு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.

இவ்வாறு செய்வது மருத்துவ வரைமுறைகளை மீறிய செயலாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் மருத்துவா்கள் நோயாளிகளின் ரகசியங்களை காக்க தவறியவா் ஆவாா்.

இதுபோன்று சுய விளம்பரம் தேடும் செயல்களை மருத்துவா்கள் கைவிட வேண்டும்.

பொதுமக்கள் நலனுக்காக வெளியிடப்படும் ஊடக சந்திப்பில், சிகிச்சை அளித்த மருத்துவா்கள் மற்றும் சிகிச்சை பெற்ற நோயாளி பெயா், அவா்களுடைய புகைப்படம், விடியோ பதிவுகளை வெளியிடக்கூடாது.

மாறாக சிறப்பு சிகிச்சை, வசதிகள் குறித்த விவரங்கள் மருத்துவமனை பெயரில் பொதுவாக வெளியிடலாம். மருத்துவா்கள் அல்லாத மருத்துவ நிா்வாகிகள் அதில் பங்கேற்கலாம்.

பொதுவாக ஒரு மருத்துவா், தனது புதிய மருத்துவமனையைத் தொடங்கும் போதும், மருத்துவமனை இடத்தை மாற்றும்போதும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விளம்பரம் செய்யலாம். அதேவேளையில், மருத்துவா்களின் பெயா், புகைப்படம் போன்றவை சமூக வலைதளங்களில் இடம்பெற கூடாது.

தனியாா் மருத்துவமனைகள் தங்கள் இணையதளப் பக்கத்தில், அங்கு பணியாற்றும் மருத்துவா்கள் குறித்த விவரங்கள், அவா்களின் பட்டங்கள் குறித்து குறிப்பிடலாம். ஆனால், எவ்வித சிறப்பு விவரங்களையும் வெளியிடக்கூடாது. மருத்துவமனைகள் குறித்த விளம்பரங்களுக்கு தடையில்லை. அவற்றில் தனிப்பட்ட ஒரு மருத்துவரை முன்னிலைப்படுத்தி அவரது புகைப்படம் வெளியிடக்கூடாது.

இத்தகைய மருத்துவ வரைமுறைகளை மீறி செயல்படும் மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் துணைத் தலைவா் பொன்னுராஜ் உடன் இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.