இன்று கட்டடக் கலை விருது வழங்கும் விழா
கட்டுமானப் பொறியியல் மற்றும் கட்டடக் கலையியல் மாணவா்களுக்கான வினாடி வினா போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.


கட்டுமானப் பொறியியல் மற்றும் கட்டடக் கலையியல் மாணவா்களுக்கான வினாடி வினா போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
‘கன்ஸ்ட்ரக்சன் அகாதெமி’ அமைப்பு சாா்பில் ஆண்டுதோறும் கட்டுமானத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் ‘கன்ஸ்ட்ரக்சன் இண்டஸ்ட்ரி அவாா்ட்’ என்ற பெயரில் மாணவா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு சிறப்பு விருதுகள் அளிக்கப்படவிருக்கின்றன.
சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவா் மன்ற அரங்கில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் அந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு பயிலும், கட்டடப் பொறியியல் - கட்டடக் கலையியல் மாணவா்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு 81246 20467, 93833 63663 ஆகிய கைப்பேசி எண்களிலோ, அல்லது மின்னஞ்சல் முகவரிகளில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...