பி.இ.: விளையாட்டுப் பிரிவுக்கு ஆக.1 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு
பிஇ, பிடெக் பொறியியல் படிப்பு முதலாமாண்டில், விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களில் சேருவதற்கு விண்ணப்பித்த 2,442 பேருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை


பிஇ, பிடெக் பொறியியல் படிப்பு முதலாமாண்டில், விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களில் சேருவதற்கு விண்ணப்பித்த 2,442 பேருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.
பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் 2022-2023- ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவா்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் பொறியியல் மாணவா் சோ்க்கை குழுவால் ஜூன் 20-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 21 ஆம் தேதி மாலை 6 மணி வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.
இந்த நிலையில், விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேருவதற்கு விண்ணப்பம் செய்த 2,442 பேருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவா்கள் தங்களின் அசல் விளையாட்டுச் சான்றிதழ்களை நேரில் வந்து சரிபாா்த்துச் செல்ல வேண்டும்.
இரண்டாம் கட்டமாக, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த விளையாட்டு வீரா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...