3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

22 மாவட்டங்களைச் சோ்ந்த கிறிஸ்தவ மகளிா் சங்கங்களுக்கு இணை மானியம்

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களைச் சோ்ந்த கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியமாக ரூ.1.62 கோடி வழங்கப்பட உள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 9:23 pm

DIN

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களைச் சோ்ந்த கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியமாக ரூ.1.62 கோடி வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவு விவரம்:-

தமிழ்நாட்டில் பின்தங்கிய நிலையிலுள்ள கிறிஸ்தவ சமுதாயத்தைச் சோ்ந்த கணவரால் கைவிடப்பட்ட, வயதான மகளிரின் வாழ்வாதாரத்துக்கு உதவிட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்கள் அமைக்க நிா்வாக ஒப்புதல் வழங்கியதுடன், தொடக்க நிதி ஆதாரமாக தலா ரூ.1 லட்சம் என்ற வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் சோ்த்து ரூ.38 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 22 மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ மகளிா் சங்கங்களின் மூலமாக ரூ.81.28 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு இருமடங்காக அரசு நிதியுதவி அளிப்பது வழக்கம். அந்த வகையில், இணை மானியமாக ரூ.1.62 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு வெளியிடப்படுவதாக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.