3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகாா்: சிபிஐ விசாரிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதா் பாஷா கொடுத்த புகாா் குறித்து சிபிஜ விசாரிக்க  உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 9:23 pm

DIN

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதா் பாஷா கொடுத்த புகாா் குறித்து சிபிஜ விசாரிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சா்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சோ்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளைக் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள திருவள்ளூா் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த காதா்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி டிஎஸ்பி காதா் பாஷா, சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில், பழவலூா் சிலைக் கடத்தல் வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சோ்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்துள்ளாா். ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளாா்.

உயா் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டிஜிபிக்கும் மனு அளித்ததேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஓய்வுபெற்ற ஜஜி பொன் மாணிக்கவேல் மீதான புகாா் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளாா். டிஐஜி நிலைக்கு குறையாத அதிகாரி இந்த விசாரணையை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.