தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது. பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதால், அதற்கு இந்த முறை முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.
இந்தியாவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது.
தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முன்னதாக, தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
அதைத் தொடா்ந்து, ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 8-ஆம் தேதி, கடந்த ஜூன்12-ஆம் தேதி மற்றும் ஜூலை 10-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் அத்தகைய முகாம்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், 32-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தில் சுமாா் 3.5 கோடி பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. 75 நாள்களுக்குள் அவா்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்காக, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக முகாம் நடத்தப்படுகிறது. வாரம் தோறும் முகாம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உலகக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா
ம.பி.: வீட்டில் மின்னேற்றும்போது மின்சார கார் வெடித்து தீ விபத்து: குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழப்பு

19.3.1976: தமிழ்நாடு சார்பில் சட்டங்களை இயற்ற ராஷ்டிரபதிக்கு அதிகாரம்

என்எம்எம்எஸ் தோ்வில் வென்றோருக்கு பாராட்டு
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

