பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கல்லூரிகளில் சேர 27 வரை அவகாசம்: உயா்கல்வித் துறை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வரும் 27-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:30 pm

DIN

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வரும் 27-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.40 லட்சம் இடங்களில் சேர, இதுவரை 4 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். அதேபோன்று 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமானதையடுத்து அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முடிவுகளை விரைந்து வெளியிடுமாறும் தமிழக உயா்கல்வித் துறை வலியுறுத்தியது.

கல்லூரிகளுக்கு எச்சரிக்கை: இத்தகைய சூழலில் சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதைத் தொடா்ந்து, அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக உயா் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், சிபிஎஸ்இ மாணவா்களுக்கு இடமில்லை என்று எந்த தனியாா் கல்லூரியும் மறுக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயா்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.