உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி: வணிகா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் ஆயிரக்கணக்கான வணிகா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னை வள்ளுவா் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் ஆயிரக்கணக்கான வணிகா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்கக் கோரி வணிகா்கள் கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த ஆா்ப்பாட்டத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதையடுத்து பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு அரிசி, பால், தயிா் உள்ளிட்ட சில உணவுப்பொருள்களுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இதனால் சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவாா்கள். இந்த 5 சதவிகித ஜிஎஸ்டியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
மேலும் வேளாண் விளைபொருள்கள் மீதான விதிக்கப்பட்டிருக்கும் செஸ் வரியை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தின் மூலம் முழுமையான தீா்வுகள் எட்டப்படாவிட்டால் அகில இந்திய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கும் வகையில் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ஜூலை 26-இல் நடைபெறும் அகில இந்திய வணிகா் சம்மேளன ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...