பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சரக்கு பெட்டக லாரி மோதி கூலித் தொழிலாளி சாவு

சென்னை அருகே வானகரத்தில் சரக்கு பெட்டக லாரி மோதி கூலித் தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:31 pm

DIN

சென்னை அருகே வானகரத்தில் சரக்கு பெட்டக லாரி மோதி கூலித் தொழிலாளி இறந்தாா்.

சென்னை திருவேற்காடு பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வன் (26). கூலித் தொழிலாளியான இவா், வானகரத்தில் தனது மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு சரக்கு பெட்டக லாரி, வெற்றிச் செல்வன் மீது மோதியது.

இதில் பலத்தக் காயமடைந்த வெற்றிச்செல்வன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதைப் பாா்த்த அந்த லாரி ஓட்டுநா், அங்கிருந்து தப்பியோடினாா். இது குறித்து தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வெற்றிச்செல்வன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.