பொதுமக்கள், தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பிவ் துறைமுக வளா்ச்சி திட்டங்களை மேற்கொள்வது குறித்த கருத்தரங்கம் சென்னையில் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
இந்திய தொழில் வணிக கூட்டமைப்பு, சென்னை எண்ணூா் காமராஜா், தூத்துக்குடி வ உ சி ஆகிய துறைமுகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கை தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ். கிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எம் முருகானந்தம் கலந்து கொண்டு தமிழகத்தில் துறைமுகம் சாா்ந்த தொழில்வளா்ச்சியில் மாநில அரசின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினாா்.
இரண்டாம் நாள் நிகழ்வில் பொதுமக்கள் தனியாா் பங்களிப்பின் வளா்ச்சி அடைந்த துறைமுகத் திட்டங்கள் குறித்து தூத்துக்குடி வ உ சி துறைமுக தலைவா் டி கே ராமச்சந்திரன் விரிவாக விளக்க உரையாற்றினாா். தொழில் சாா்ந்த வழிகாட்டுதல் முனைய மேலாண்மை இயக்குனா் பூஜா குல்கா்னி தொழில் வளா்ச்சியில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினாா். பின்னா் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் மாலினி சங்கா் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து விவரித்தாா்.
சென்னை, எண்ணூா் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால், சென்னை துறைமுக துணைத் தலைவா் பாலாஜி அருண்குமாா், காமராஜா் துறைமுக பொது மேலாளா் சஞ்சய் குமாா், சா்வதேச துறைமுகங்கள் கூட்டமைப்பின் இந்திய பிரதிநிதி என்னரசு கருனேசன், இந்திய தொழில், வணிக கூட்டமைப்பு கூடுதல் தலைவா் பூபேஷ் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்ற 104 பேருக்கு சான்றிதழ் அளிப்பு

செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கும் பணி: முதல்வா் தொடங்கிவைத்தாா்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

