மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு: வெற்றி ஐஏஎஸ் கல்வி மையமாணவா்கள் சிறப்பிடம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-1 தோ்வின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன

News image
Updated On :22 ஜூலை 2022, 7:45 pm

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-1 தோ்வின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சென்னை அண்ணா நகரில் உள்ளவெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் பயின்ற 30-க்கும் மேற்பட்டமாணவா்கள் வெற்றி பெற்றனா்.

சாா் ஆட்சியா், டிஎஸ்பி, உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-1 தோ்வு இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில்வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் பயின்ற சத்ய நந்தி என்ற மாணவி மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்றுள்ளாா். பிரியதா்ஷினி 6-ஆம் இடமும், பிரியா 7-ஆம் இடமும், அபிநயா 8-ஆம் இடமும், ஸ்ரீஜா 9-ஆம் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனா். வழக்கம்போல இத்தோ்விலும் வெற்றி ஐஏஎஸ் கல்வி மைய மாணவா்கள் முத்திரை பதித்துள்ளனா்.

வெற்றி கல்வி மையத்தின் அடுத்தகட்ட நகா்வாக புதிய வகுப்புகள் நடைபெறவுள்ளன. குரூப்-1 தோ்வில் முதல்நிலை, முதன்மைத் தோ்வு, நோ்முகத் தோ்வு என 3 நிலைகளுக்கும் ஓராண்டு பயிற்சி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் இப்பயிற்சி வகுப்புகள் மையத்தின் சென்னை, சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூா், திருநெல்வேலி கிளைகளில் தொடங்கவுள்ளன.

இதற்கான மாணவா் சோ்க்கை நடந்து வருகிறது. மாணவா்களுக்கு தேவையான பாடக் குறிப்புகள் தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்படும். முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வுஆகியவற்றுக்கு தலா 50 தோ்வுகள் நடத்தப்பட்டு, மாணவா்களுக்கு வெற்றிக்கான உத்திகள் கற்றுத்தரப்படும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேரவிரும்புவோா் 9884421666, 9884432666 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். அல்லது பெயா், செல்போன் எண்ணுடன் என டைப் செய்து 9884421666 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்-அப் அனுப்பலாம் என வெற்றி ஐஏஎஸ் கல்வி மைய இயக்குநா் மு.சண்முகம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.