அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆடிப் பண்டிகை: கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில் விற்பனை அதிகரிப்பு

ஆடிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் கால்நடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2022, 4:39 am

DIN

ஆடிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் கால்நடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடைச் சந்தை இயங்கி வருகிறது. வாரம்தோறும் சனிக்கிழமை அன்று அதிகாலை முதலே நடைபெறும் இச்சந்தையில் ஆடுகள், கோழிகள்,ச ண்டை சேவல், பந்தயப் புறா, பசுமாடுகள் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கான காளை மாடுகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது வழக்கம்.

ஆடிப் பண்டிகை நெருங்கி வரும்  நிலையில், இச்சந்தையில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில் கால்நடைகள் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

மேச்சேரி, பெண்ணாகரம், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும் அதிகப்படியான கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கால்நடைகளை மொத்தமாக கொள்முதல் செய்து வந்த நிலையில், பண்டிகை காலம் நெருங்கி வருவதால் ஆடு மற்றும் கோழிகளின் விலை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.