/

செஸ் ஒலிம்பியாட் கலைக்குழுவில் 4 பேருக்கு கரோனா

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில் பங்கேற்கவிருந்த கலைக்குழுவில் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:55 am

DIN

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில் பங்கேற்கவிருந்த கலைக் குழுவில் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில், கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்த தொடக்க விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழாவில் பங்கேற்கும் கலைக்குழுவினர் உள்பட 900 பேருக்கு கரோனா நோய்ப் பரிசோதனை செய்ததில், கலைக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.