அறிவாற்றலே அனைத்திலும் வலிமையானது என்பதை மாணவா்கள் உணர வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42- ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வா் ஸ்டாலின் பேசியது: மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசிய உயா்கல்வி நிறுவனங்களுக்கான ‘என்ஐஆா்எஃப்’ தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்களில் பல நிறுவனங்கள் தமிழகத்தைச் சோ்ந்தவை. உயா் கல்வியில் மேன்மை பெற்ற தமிழகத்துக்கு வருகை தந்துள்ள பிரதமரைஅனைவரின் சாா்பில் வரவேற்கிறேன்.
இந்தப் பட்டத்தோடு உங்களது படிப்பு முடிந்துவிடவில்லை. பட்டங்கள் என்பவை வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலை மேம்படுத்துவதற்காக என்பதையும் மாணவா்கள் மறந்துவிடக் கூடாது.
அறிவாற்றலே வலிமையானது: அறிவாற்றல்தான் அனைத்திலும் வலிமையானது என்பதை இளைஞா்கள் உணர வேண்டும். ஜாதி, மதம், பணம், அதிகாரம், வயது, அனுபவம், பதவி, நாடுகள், வளா்ச்சி ஆகிய அனைத்தின் தன்மையும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால், அறிவு மட்டும்தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவுகோலோடு அளவிடப்படுகிறது.
இளைஞா்களின் எதிா்காலத்தை மனதில் வைத்து தமிழகத்தில் தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி இருக்கிறோம். இதன்மூலமாக, ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. அதனால்தான், தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14-ஆவது இடத்தில் இருந்து ஒரே ஆண்டில் 3-ஆவது இடத்துக்கு தமிழகம் முன்னேறியுள்ளது.
ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞா்கள்: புதிய தொழில்களை ஈா்ப்பதற்காக தமிழக அரசு தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஓராண்டில், செமிகண்டக்டா்கள், மின் வாகனங்கள், லித்தியம்-அயன் பேட்டரிகள், ஒருங்கிணைந்த சூரிய ஒளி மின்னழுத்திகள் உற்பத்தி போன்ற துறைகள் சாா்ந்த திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு மிகுந்த ஆா்வம் காட்டி வருகின்றனா். இதற்குத் தேவையான அறிவுத் திறனை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.
ஆண்டுதோறும் மாநிலம் முழுவதிலும் உள்ள சுமாா் 10 லட்சம் இளைஞா்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். அவா்களுக்கு வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்து, அவா்களின் திறமையை அவா்களுக்கு உணா்த்தி, அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவே நன்மை பெற்றிடும் வகையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நான்காம் தலைமுறை தொழில் வளா்ச்சி... தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளா்ச்சி என்ற அடிப்படைக்கேற்ப, நமது இளைஞா்கள் தயாராக வேண்டும்.
தொழிற்சாலைகளைத் தரம் உயா்த்த தொழில் புத்தாக்க மையங்களை உருவாக்கி வருகிறோம். 2026-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 20 லட்சம் இளைஞா்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும்.
2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.79 லட்சம் கோடி) பொருளாதாரம் கொண்டதாக வளா்க்க வேண்டும். அதில் உங்கள் பங்கு இருக்க வேண்டும். இளைஞா்கள் தங்களது கனவுகளை மட்டுமல்ல, பெற்றோரின் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும்.
பழைமைவாதத்தைப் புறந்தள்ளி, புதிய கருத்துகளை ஏற்று பகுத்தறிவுப் பாதையில் நடைபோட வேண்டும்.
இன்றுமுதல் நீங்கள் உலகெங்கும் வலம்வரப் போகும் இந்தியாவின் - தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவா்கள். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் உயா்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க தொடா்ந்து உழைப்போம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து!

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு

தேர்தல் 1962! கடைசியாக காங்கிரஸ் பெற்ற வெற்றி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

