

ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு தாம்பரம் ஆணையாரக கூடுதல் பொறுப்பு வழங்கி காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகரக் காவல்துறையை மூன்றாக பிரித்து தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டது. இதில், தாம்பரம் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரவி, பின்னர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க | வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு!
இந்நிலையில், தாம்பரம் காவல்துறை ஆணையராக இருந்த டிஜிபி ரவி, நேற்று பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஆவடி ஆணையராகவுள்ள சந்தீப்பிற்கு கூடுதல் பொறுப்பாக தாம்பரம் ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.