தேர்தல் வாக்குறுதிகளின் நிலை என்ன? மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதில், தேர்தலின்போது வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து இன்று திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்களாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கடைமடைப் பகுதிகளுக்கு மேட்டூர் அணை நீர் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும், பருவமழையின்போது பயிர்கள் நீரில் மூழ்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அனைத்து துறை சார்ந்த அமைச்சர்கள், செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...