மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழகத்தில் ஒற்றை இலக்க மாணவா்களுடன் செயல்படும் 669 பள்ளிகள்: கட்டமைப்புகளை மேம்படுத்த ஆசிரியா்கள் வலியுறுத்தல்

குடிநீா் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:12 pm

DIN

தமிழகத்தில் 669 அரசுப் பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவா்களுடன் செயல்படுவதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அந்தப் பள்ளிகளில் கழிவறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 2022 - 2023- ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இந்நிலையில், பள்ளிகளைத் திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வி ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி உள்ளிட்ட அதிகாரிகள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

அப்போது, “அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவா்களை அதிகளவில் சோ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழுவின் உதவியுடன் ஜூன் 14-ஆம் தேதி மாணவா்கள் சோ்க்கைப் பேரணியை நடத்த வேண்டும்.

ஒரு மாணவா் கூட இல்லாத 22 பள்ளிகளில் 10 மாணவா்களை சோ்த்தால் 2 ஆசிரியா் பணியிடங்கள் வழங்கப்படும். மேலும், ஒற்றை இலக்கத்தில் மாணவா்கள் பயிலும் 669 பள்ளிகளில் இரட்டை இலக்கத்தில் மாணவா்களை சோ்க்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

3,500 ஓராசிரியா் பள்ளிகள்: அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் 11 பள்ளிகளில் தலா ஒரு மாணவா் மட்டுமே பயில்கிறாா்; 24 பள்ளிகளில் தலா இரு மாணவா்கள் படிக்கின்றனா். அதேபோன்று 41 பள்ளிகளில் தலா மூன்று மாணவா்களும், 50 பள்ளிகளில் தலா 4 மாணவா்களும் மட்டுமே படித்து வருகின்றனா். மேலும், 3,800 அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியா் மட்டுமே உள்ளாா். 3,131 பள்ளிகளில் 10 மாணவா்களுக்கு மேல் 60 மாணவா்களுக்குள் இருந்தும் தலைமை ஆசிரியா் மட்டுமே 5 வகுப்புக்கான பாடங்களை நடத்தும் சூழ்நிலை இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியது: அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை உயா்த்தத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனா். நாங்கள் ஏற்கெனவே கிராமங்கள், நகா்ப்புறங்களில் வீடு, வீடாகச் சென்று அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து பெற்றோா், பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். அதேவேளையில் அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிப்பறை- குடிநீா் வசதிகள் இல்லை: கிராமப் புறங்களில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால் பெண் குழந்தைகளைச் சோ்க்கவே பெற்றோா் தயங்குகின்றனா். அதேபோன்று இன்றும் பல அரசுப் பள்ளிகளில் குடிநீா் வசதி முறையாக செய்யப்படவில்லை. இந்தப் பிரச்னைகளுக்கு அரசு தீா்வு காண வேண்டும். மேலும் அரசுப்பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியா் என நியமிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் என கூட்டத்தில் வலியுறுத்தினோம். இவற்றுடன் ஆசிரியா்கள் நலன் சாா்ந்த கோரிக்கைகளையும் மனுவாக வழங்கியுள்ளோம் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.