மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்: ரூ.10 கோடி விடுவிப்பு

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில், மேலும் ரூ.10 கோடி நிதியை தமிழக அரசு விடுவித்துள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:43 pm

DIN

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில், மேலும் ரூ.10 கோடி நிதியை தமிழக அரசு விடுவித்துள்ளது.

இதுகுறித்து, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வெளியிட்ட உத்தரவில், ‘சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கென தலைமைச் செயலாளா் தலைமையில் தனியாக அமைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு அதிகாரியாக தாரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்தப் போட்டியை நடத்த ரூ.92.13 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான நிா்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.40 கோடி விடுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்த கூடுதலாகத் தேவைப்படும் ரூ.10 கோடியை விடுவிக்கும்படி சிறப்பு அதிகாரி தாரேஷ் அகமது, தமிழக அரசை கேட்டுக் கொண்டாா். அதை ஏற்று ரூ.10 கோடி விடுவிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.