மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த தினம்: அரசு சாா்பில் விழா

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) விழா நடைபெறவுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:58 pm

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) விழா நடைபெறவுள்ளது.

சென்னை ஓமந்தூராா் வளாகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள உருவப் படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தவுள்ளாா்.

மேலும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம், அவா் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கும் முதல்வா் மற்றும் அமைச்சா்கள் சென்று மரியாதை செலுத்துகின்றனா்.

விருதுகள் வழங்குதல்: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, இரண்டு புதிய விருதுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டன. கலைஞா் எழுதுகோல் விருது, கலைஞா் கலைத்துறை வித்தகா் விருது ஆகிய விருதுகளுக்கு விருதாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியின் போது விருதுகளை வழங்கவுள்ளாா்.

மேலும், அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிற நிகழ்ச்சிகளிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால், செய்தித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் சீரிய முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.