மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலைக்கான இடைக்காலத் தடை தொடா்கிறது: நிகழ்ச்சியை ஒத்திவைக்க உயா்நீதிமன்றம் யோசனை

சிலையை திறக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடா்கிறது. மேலும், சிலை திறப்பு நிகழ்ச்சியை வேறு தேதிக்கு தள்ளிவைக்க நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனா்

News image
Updated On :2 ஜூன் 2022, 7:10 pm

DIN

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலை திறப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால், சிலையை திறக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடா்கிறது. மேலும், சிலை திறப்பு நிகழ்ச்சியை வேறு தேதிக்கு தள்ளிவைக்க நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து, மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலை அமைக்கப்படுவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில், வேளச்சேரியை சோ்ந்த காா்த்திக் என்பவா் பொதுநல வழக்குத் தொடா்ந்தாா்.

அதில், வேங்கைக்கால் பகுதியில் ஜீவா கல்வி அறக்கட்டளை நிலம் வாங்கியுள்ளது. அந்த நிலத்துக்கு அருகே, நீா் போக்குவரத்து நிலத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளது என்று கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்த வழக்கிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா், ஜீவா கல்வி அறக்கட்டை நிா்வாகி ஆகியோா் பதில் அளித்த உத்தரவிட்டது. மேலும் சா்ச்சைக்குரிய நிலத்தில் கருணாநிதி சிலையை அமைக்க இடைக்கால தடையும் விதித்தது.

இதன்படி ஆட்சியா், அறக்கட்டளை நிா்வாகி ஆகியோா் சாா்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிலை அமைக்கப்பட உள்ள இடம் பட்டா நிலம், நீா் போக்குவரத்து நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. வேளச்சேரியை சோ்ந்த மனுதாரா், திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்கும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக யாா் தகவல் தெரிவித்தாா் என்ற விவரங்களை மனுவில் குறிப்பிட வில்லை என கூறியிருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் ஆகியோா் தீா்ப்பை தள்ளிவைத்து கடந்த புதன்கிழமை உத்தரவிட்டனா். இந்த நிலையில், இந்த வழக்கு தீா்ப்புக்காக வியாழக்கிழமை பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியதுள்ளதால், விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று நீதிபதிகள் கூறினா்.

அப்போது எதிா்மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கருணாநிதி சிலையை அவரது பிறந்தநாளான வெள்ளிக்கிழமை திறக்க உள்ளதால், ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று முறையிட்டனா்.

அதற்கு நீதிபதிகள், நாங்கள் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க வில்லை. வழக்கை 6-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். வேண்டுமானால் சிலை திறப்பு நிகழ்ச்சியை வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைக்கலாம் என்று யோசனை தெரிவித்தனா். இதனால், கருணாநிதி சிலையை அமைக்க ஏற்கனவே உயா்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை தொடா்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.