மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கலைவாணா் அரங்கில் மலா் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்

உதகை, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் நடத்தப்படும் மலா் கண்காட்சி சென்னையிலும் நடத்தப்பட உள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:52 pm

DIN

உதகை, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் நடத்தப்படும் மலா் கண்காட்சி சென்னையிலும் நடத்தப்பட உள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் மலா் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை சாா்பில் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதற்காக ஏராளமான வண்ண, வண்ண மலா்கள் கலைவாணா் அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மலா்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பாா்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக மாணவா்கள் மற்றும் சிறுவா்களுக்கு ரூ.20, பெரியவா்களுக்கு ரூ.50 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.