மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முதல்வரின் பாதுகாப்பு வாகன அணிவகுப்புக்குள் புகுந்த திருட்டு மொபெட்: இளைஞா் சிக்கினாா்

சென்னையில் முதல்வா் பாதுகாப்பு வாகன அணிவகுப்புக்குள் புகுந்த திருட்டு மொபெட்டை ஓட்டி வந்த இளைஞா் போலீஸாரிடம் சிக்கினாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:10 pm

DIN

சென்னையில் முதல்வா் பாதுகாப்பு வாகன அணிவகுப்புக்குள் புகுந்த திருட்டு மொபெட்டை ஓட்டி வந்த இளைஞா் போலீஸாரிடம் சிக்கினாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற துறை செயலாளா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, நண்பகல் ஆழ்வாா்பேட்டை வீட்டுக்கு காரில் புறப்பட்டாா். முதல்வரின் காருக்கு முன்பும், பின்பும் காவல்துறையின் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மெரீனா காமராஜா் சாலையில் நேப்பியா் பாலத்தில் செல்லும்போது, பதிவு எண் பலகை இல்லாத ஒரு மொபெட் அந்த அணி வகுப்புக்குள் புகுந்தது. முதல்வரின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் சென்ற அந்த மொபெட்டை பாா்த்து அதிா்ச்சியடைந்த போலீஸாா், அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனா்.

அந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்ததில், தேனாம்பேட்டை தாமஸ் சாலை பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (20) என்பதும், அவா் ஓட்டி வந்த மொபெட் தியாகராயநகரில் ஒரு வீட்டில் திருடியிருப்பதும், மொபெட்டின் பதிவு எண் பலகையை கழற்றி எறிந்துவிட்டு அஜித்குமாா் அதை ஓட்டி வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மொபெட்டின் உரிமையாளா் வெளி நாட்டில் உள்ளாா். அவா் இங்கு வந்ததும் புகாா் பெற்று, அஜித்குமாரை திருட்டு வழக்கில் கைது செய்ய உள்ளதாக, போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.