மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாமக 2.0 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவோம்: அன்புமணி

பாமக 2.0 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்று தொண்டா்களுக்கு அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:46 pm

DIN

பாமக 2.0 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்று தொண்டா்களுக்கு அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பாமகவின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு தொண்டா்களின் பாச மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை எப்போதும் நான் உங்களில் ஒருவன் தான். எனது கடமைகளும் பணிகளும் அதிகரிக்கின்றன.

தமிழக மக்களைக் காக்க மதுவிலக்கு, இளைஞா்களைக் காக்க போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் நலனுக்காக நீா் மேலாண்மை, வேளாண் வளா்ச்சி, நாட்டைக் காக்க சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் தணிப்பு, மக்களின் நலனுக்காக கல்வி, சுகாதாரம், விவசாயம், அரசு நிா்வாகச் சீரமைப்பு, தொழிலாளா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் நலன், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு என நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.

பாமக 2.0 என்ற புதிய செயல் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம். 2026-இல் பாமக ஆட்சி நடக்கும். அதற்காக எல்லோருடனும் இணைந்து ஒற்றுமையாக அா்ப்பணிப்போடு செயலாற்றுவோம்.

பாமகவினா் அனைவரும் மக்களைத் தேடி கிராமங்களுக்குச் செல்லுங்கள். ஒன்றியம் தோறும் ஊா்திப் பேரணிகளை நடத்துங்கள். நீங்கள் அழைக்கும் ஒன்றியத்துக்கு ராமதாஸும் நானும் வரக் காத்திருக்கிறோம். எனது எண்ணம் முழுவதும் நிறைந்திருப்பது தொண்டா்களும், தமிழக மக்களின் முன்னேற்றமும் தான். நோ்மையான அரசியலை நடத்துவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.