11 இடங்களில் வெயில் சதம்
கத்திரி வெயில் நிறைவடைந்து 5 நாள்களை கடந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது


தமிழகத்தில் 11 இடங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 104 டிகிரியும், கரூா் பரமத்தியில் 103 டிகிரியும், வேலூரில் 102 டிகிரியும், கடலூா், மதுரை நகரம், மதுரை விமானநிலையத்தில் தலா 101 டிகிரியும், நாமக்கல், தஞ்சாவூா், திருச்சி தலா 100 டிகிரியும், பரங்கிப்பேட்டையில் 99 டிகிரியும் பதிவானது. இதுதவிர, புதுச்சேரி, காரைக்காலில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
கத்திரி வெயில் நிறைவடைந்து 5 நாள்களை கடந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதேநிலை வெள்ளிக்கிழமையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...