தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலத்தில் விக்ரம் திரைப்படம் வெளியீடு: ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டம்

சேலத்தில் விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர்.

News image
Updated On :3 ஜூன் 2022, 6:21 am

DIN


சேலத்தில் விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழ் சினிமாவின் மிகுந்த  எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். குறிப்பாக விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியது.

அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய முதல் காட்சியை ரசிகர்கள் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்தும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர். 

மேலும், ரசிகர்கள் ஆரவாரமாக கோஷமிட்டு கமலஹாசனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து விக்ரம் படத்தை உற்சாகமாக கொண்டாடினர். 

இதுபோல் சேலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு திரையரங்குகளிலும் கமல், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.