'ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?'- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் 

ஞானவாபி மசூதி - காசி விசுவநாதர் கோயில் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், 'ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?' என்று கேள்வி
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

ஞானவாபி மசூதி - காசி விசுவநாதர் கோயில் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், 'ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார். 

ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி நிறைவுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:  

ஞானவாபி மசூதி-காசி விசுவநாதர் கோவில் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

வரலாற்றை மாற்ற முடியாது. இன்றைய இந்துக்களோ, இன்றைய முஸ்லீம்களோ இதனை உருவாக்கவில்லை. அது அப்போது நடந்தது. 

"இந்துக்களுக்கு சில இடங்கள் மீது சிறப்பு பக்தி இருந்தது மற்றும் அதைப் பற்றி நாங்கள் பேசினோம். ஆனால், இந்த இடங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்னைகளில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சிந்திப்பதில்லை. இன்றைய முஸ்லீம்களின் முன்னோர்களும் இந்துக்களே. 

ஆனால், நாம் நாள்தோறும் ஒரு புதிய சர்ச்சையை வெளியே கொண்டு வரக்கூடாது. நாம் ஏன் சர்ச்சையை அதிகரிக்க வேண்டும்? எங்களுக்கு ஞானவாபி மீது நமக்கு பக்தி இருக்கிறது. அதை முன்னோக்கி நாம் ஏற்கனவே வழிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும் என கேள்வி எழுப்பினார். 

மேலும், "மனதில் பிரச்னைகள் இருந்தால்தான், சர்ச்சை எழுகிறது. அது யாருக்கும் எதிரானது அல்ல, அதை அப்படி கருதக்கூடாது. முஸ்லிம்களும் அப்படி கருதக்கூடாது மற்றும் இந்துக்களும் அதை செய்யக்கூடாது.

அப்படி ஏதாவது இருக்கிறது என்றால், இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னையை சுமூகமாக பேசி பரஸ்பர உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், "நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கும்போது அது என்ன முடிவுவாக இருந்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நமது நீதித்துறையை புனிதமானதாகவும், உன்னதமானதாகவும் கருதி, தீர்ப்புகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். அதன் முடிவுகளை நாம் கேள்வி கேட்கக்கூடாது." தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்குவது பொருத்தமற்றது. இந்துக்களும் முஸ்லீம்களும் வரலாற்று உண்மைகளை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

மேலும், தங்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்) எந்தவித வழிபாட்டு முறைகளும் எதிரானது அல்ல என்றும், நாங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, அவை அனைத்தையும் புனிதமாகக் கருதுகிறோம் என்று. மோகன் பாகவத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com