புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்கின் திரை திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
தீ மளமளவென பரவியதால், அரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது.
படத்தின் இறுதிக் காட்சி ஓடிக் கொண்டிருந்தபோது தியேட்டரில் உள்ள திரையின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென பரவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் படம் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள அனைவரும் அலறி அடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியேறினர்.
பின்னர் இதுகுறித்து காலாப்பட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் தியேட்டர் திரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!
புதுக்கோட்டையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை!
என்ன சொல்கிறார்? யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?
ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

