நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழகத்தில் கரோனா நிலவரம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் ராதாகிருஷ்ணன்

மிழகத்தில் சென்னை உள்ளிட்ட மிக முக்கியமான 5 மாவட்டங்களில்  கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image
தமிழகத்தில் கரோனா நிலவரம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் ராதாகிருஷ்ணன்
Updated On :9 ஜூன் 2022, 10:23 am

DIN


சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மிக முக்கியமான 5 மாவட்டங்களில்  கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது மருத்துவத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது.

மேலும், தமிழகத்தில் கரோனா அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியருப்பது கவலைதரும் தகவலாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.