நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு... அமைதி காக்க வளர்மதி வேண்டுகோள்

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்

News image
Updated On :23 ஜூன் 2022, 6:06 am

DIN


அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி வேண்டுகோள் விடுத்தார். 

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் இல்லை. அதேசமயம், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் கலந்துகொள்வார் என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையிலும் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து முதலில் பொதுக்குழு மேடைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை வெளியே செல்லுமாறும், ஒற்றைத் தலைமையே வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் கூச்சலிட்டனர். 

இதையடுத்து தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி வேண்டுகோள் விடுத்தார். 

மேலும், ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக வளர்மதி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.