டாஸ்மாக் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி உள்ளிட்ட மலை மற்றும் காடு சாா்ந்த மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டி வந்தனா். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மது பாட்டில்களில், ‘ஈசி 10’ என்னும் ஸ்டிக்கா் ஒட்டி 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடவடிக்கை கொண்டுவரப்பட்டது.
இந்த ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட பிறகு டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதை, நீலகிரியை தொடா்ந்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து, அதனை வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க டாஸ்மாக் நிா்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், காலி மதுபாட்டில்களை ஒப்படைப்பது தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஸ்போர்ட் இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல! பயணத்துக்கு மட்டுமே!

த்ரிஷா கொடுத்த டிராமிசு கேக் ஹைதராபாத்-ல் மட்டும் கிடைக்குமா? என்ன ஸ்பெஷல்?

குரூப் பி பிரிவில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி..! எப்படி?

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிமுக படப்பிடிப்பு அப்டேட்!
விடியோக்கள்

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK



