தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேர்வில் தோல்வி: மயிலாடுதுறையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை

மயிலாடுதுறையில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சியடையாத சோகத்தில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

News image
உயிரிழந்த மாணவர் ரித்திஷ்கண்ணா
Updated On :28 ஜூன் 2022, 5:37 am

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சியடையாத சோகத்தில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணியத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ரித்திஷ்கண்ணா(16). மயிலாடுதுறையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த ரித்திஷ்கண்ணா நேற்று வெளியான பதினோராம் வகுப்பு தேர்வு முடிவில் 4 பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறவில்லை. 

நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற ரித்திஷ்கண்ணா தேர்வில் தோல்வியடைந்தது தெரியவந்த பின்னரும் வகுப்பில் இருந்துள்ளார். அதன்பின்னர் பள்ளி நேர முடிவுக்குப் பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவர், வீட்டில் தான் தேர்வில் தேர்ச்சி அடைந்துவிட்டதாக கூறியுள்ளார். அதன் பின்னர் மன உளைச்சலில் இருந்த மாணவர் ரித்திஷ்கண்ணா, இரவு அனைவரும் உறங்கிய பிறகு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை காவலர்கள், மாணவரின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.