மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் நாளை( மார்ச்-3) முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்-3) காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்கண்காணிப்பார்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
தமிழகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது, சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பின், மார்ச்-5 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையடுத்து அதுகுறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மார்ச் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், பட்ஜெட்டில் அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவு!

இந்தியாவில் பிரம்மாண்டமாக வெளியான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமையட்டும்; ரஹானேவுக்கு புஜாரா வாழ்த்து!

தில்லியால் தள்ளாடும் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! ராகுலின் ஒப்புதலுக்கு காத்திருப்பு!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



