முதல்வரின் அறிவுறுத்தலின்படி, நமது அரசு அலோபதி மருத்துவம் தவிர பிற மருத்துவ முறைகளையும் கோவிட் பெருந்தொற்றின் போது ஊக்குவித்து இந்திய மருத்துவ முறைகளை சிறப்பாக அமல்படுத்தி கோவிட் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது. நமது முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கோவிட் சிகிச்சை அளிக்கப்பட்டு பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பெரிதும் உதவியது. பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையை கையாள மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு மாநிலம் முழுவதும் ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு தனது பங்களிப்பாக பல்வேறு வகைகளிலும் பொது அமைப்பு காலங்களுக்கு ஏற்றவாறு செயல்பட்டு மக்களுக்கான அத்தியாவசய பொருட்களும் சேவைகளும் தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக செயல்பட்டன என்பதை இந்த வேளையில் கூறிக்கொள்கிறேன். மேலும் தனது பணியாளர்களை தடுப்பூசி போட ஊக்குவித்தமை, ஆக்ஸிஜன் உற்பத்தியில் உதவியது என பலவகைகளில் மேலும் கரோனா கால விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது பணிகளை அமைத்து கொண்டது என பலவகைகளில் முக்கிய பங்காற்றியது இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு. இந்த அரசின் அங்கமாகிய இந்த சுகாதார துறையும் தொழிற்துறையுடன் இணைந்து செயல்பட்டு “அனைவருக்குமான உடல் நலன்” எனும் குறிக்கோளினை அடைய பணிசெய்வோம் என கூறிக்கொள்கிறேன். நமது முதல்வர் கூறியது போல இந்த தமிழ்நாடு அரசானது மக்கள் நலன், தொழில் வளம், சமூக நீதி இவற்றின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து இயங்கிகொண்டு இருக்கும் என உறுதியளிக்கிறேன்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேம்பாடுத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், அப்போலோ மருத்துவமனை துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி, இந்திய தொழில் கூட்டமைப்பு தென் மண்டலம் தலைவர் ஊ.மு.ரங்கநாதன், இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு தலைவர் மரு. ஊ. சந்திரகுமார், இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு முன்னாள் தலைவர் ளு.சந்திரமோகன் அவர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு துணைத் தலைவர் திரு.சத்தியகம் ஆர்யா அவர்கள் மற்றும் முன்னனியினர் உடனிருந்தனர்.