உக்ரைன் அதிபருக்கு ரஷிய ராணுவம் உதவியதா? கொலை முயற்சியிலிருந்து எப்படி தப்பினார்?
ரஷிய படையெடுப்பின் முதல் இலக்கே தான்தான் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.


கடந்த வாரம், ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியதிலிருந்து, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை கொலை செய்ய மூன்று முறை முயற்சிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை விடுத்ததன் காரணமாக கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது என தி டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் அதிபரை கொலை செய்வதற்காக வாக்னர் குழு மற்றும் செச்சென் கிளர்ச்சியாளர்கள் என இரண்டு வெவ்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தி வாஷிங்டன் போஸ்ட், ஸெலென்ஸ்கியை கொலை செய்ய செச்சென் பாதுகாப்பு படை அனுப்பப்பட்டதாகவும் ரஷியாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை முன்கூட்டியே எச்சரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. கொலை செய்ய அனுப்பப்பட்ட பாதுகாப்பு படை அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "உக்ரைன் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் செச்சென் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த இரத்தக்களரி போரில் பங்கேற்க விரும்பாத ரஷியாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவையிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று என்னால் சொல்ல முடியும்" என்றார்.
இதையும் படிக்க | உக்ரைனில் இந்திய மாணவர் காயம்: அமைச்சர் தகவல்
ரஷிய கூட்டாட்சி பாதுகாப்பு சேவையில் பணிபுரிந்து வருவோரில் போரை விரும்பாத சிலர் கொலை முயற்சி குறித்து தகவல் கொடுத்ததாக தி டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களை உக்ரைனியர்கள் எதிர்பார்த்திருந்தது குறித்து வாக்னர் கூலிப்படையினரிடம் எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் எப்படி உக்ரைனியர்களுக்கு கிடைத்தது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...