தஞ்சை பெரியகோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று தஞ்சாவூா் வருகை தந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா், அங்கிருந்து காா் மூலம் தஞ்சாவூருக்கு பிற்பகல் சென்றார். தஞ்சாவூா் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பிறகு முன்னாள் ராணுவத்தினரை சந்தித்துப் பேசினார். பின்னா் தஞ்சாவூா் பெரியகோயில் ஆளுநர் ரவி சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநருடன் அவரது மனைவி லட்சுமி ரவியும் உடன் இருந்தார்.
இதையும் படிக்க- முதுநிலை நீட் தேர்வு: கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு
முன்னதாக சரசுவதி மகால் நூலகத்தையும் அவர் பார்வையிட்டார். இதனிடையே ஆளுநர் வருகையையொட்டி தஞ்சாவூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, மாா்ச் 13 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தஞ்சாவூரிலிருந்து காா் மூலம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சமஸ்தான் கோயில் வளாகத்தில் நடைபெறும் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறாா்.
அங்கிருந்து மீண்டும் காா் மூலம் தஞ்சாவூருக்கு வரும் அவா் பிற்பகல் 2.40 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையத்துக்குச் சென்று, வடகிழக்கு மாநிலங்களின் கலை விழாவான கைவினைப் பொருட்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் கலந்து கொள்கிறாா். இரவு தஞ்சாவூரில் தங்கும் அவா் திங்கள்கிழமை காலை காா் மூலம் திருச்சி விமானநிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னைக்குச் செல்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை விவகாரம்: இன்று திமுக எம்.பி.க்கள் அவசரக் கூட்டம்!

50 இல்லாவிட்டாலும் 33 வரவேற்கத்தக்கது! மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாயாவதி ஆதரவு!
ரூ. 9 லட்சம் கோடி லாபம்.. ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


