பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழக பேரவையில் நாளை(மார்ச் 18) பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை கூடவுள்ள நிலையில், முதல் நாளிலேயே 2022 - 2023-க்கான நிதிநிலை அறிக்கை(பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ளன.

News image
தமிழக அரசு
Updated On :17 மார்ச் 2022, 5:17 am

DIN

தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை கூடவுள்ள நிலையில், முதல் நாளிலேயே 2022 - 2023க்கான நிதிநிலை அறிக்கை(பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ளன. தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை தாக்கலாகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், வரும் நிதியாண்டுக்கான மாநிலத்தின் வரவு, செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளாா். கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் காகிதமில்லாத நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடுதிரை உதவியுடன் கணினி முறையில் நிதிநிலை அறிக்கை தாக்கவுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம், திமுக ஆட்சியில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜன், தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிகழ்வானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. பேரவை கூட்டத் தொடரில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் கேள்வி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகும். படிப்படியாக பேரவையின் அனைத்து செயல்பாடுகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்திருந்தார்.

நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வேளாண்மை நிதிநிலை அறிக்கை வரும் சனிக்கிழமை தாக்கலாகிறது. இதனை வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தாக்கல் செய்கிறாா். பொது மக்கள், விவசாயிகள், வேளாண் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு வேளாண் நிதிநிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2022-2023-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை, 2021-2022-ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கைகள் ஆகியன நிதியமைச்சரால் வரும் 24-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளன. பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது அலுவல் ஆய்வுக் குழுவின் ஆலோசித்து தெரிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.